RTE TN சேர்க்கை 2020-21 ஆன்லைன் விண்ணப்ப படிவம் 

 

 RTE என்றால் என்ன ?

பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களின் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் கல்வி பெற முடியாத சூழ்நிலை உள்ளது. கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச கட்டாயக் கல்விச் சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்ததையடுத்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் எல்.கே.ஜி. சேர்க்கையில் 25 சதவிகித இடஒதுக்கீட்டை ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே அந்தச் சட்டம் ஆகும். இந்த சட்டத்தின் கீழ் தமிழகத்தில் 2013-2014-ஆம் கல்வி ஆண்டில் இருந்து, ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

 


 

RTE மூலம் மாணவர்களைச் சேர்க்க தகுதி என்ன?


1.வருமானம்:


மாணவர்களின் பெற்றோருக்கு ஆண்டு வருமான 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும்போது வருமான சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.

2.வயது:

  • 1.08.2016 - 8.08.2017 க்கு இடைப்பட்ட குழந்தைகள்  இந்த குழந்தைகள் அனைவரும் ஆர்டிஇ தமிழ்நாடு எல்.கே.ஜி சேர்க்கை 2020-21க்கு தகுதியானவர்கள்.
  • 2.08.2014 - 1.08.2015 க்கு இடைப்பட்ட குழந்தைகள்  ஆர்டிஇ  தமிழ்நாடு 1 ஆம் வகுப்பு சேர்க்கை 2020 க்கு விண்ணப்பிக்கலாம்.
3.விண்ணப்பிக்கும் தேதி:

ஆரம்ப தேதி - 27/08/2020
முடியும் தேதி- 20/09/2020

4.தேவையான ஆவணங்கள் :
  • குழந்தை போட்டோ
  • ஆதார்/குடும்ப அட்டை 
  • வருமான சான்றிதழ் 
  • ஜாதி சான்றிதழ் 
  • பிறப்பு சான்றிதழ் 

RTE விண்ணப்பிப்பது எப்படி?


1) RTE மூலமாகத் தமிழகத்தில் ஏழை மாணவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்ர்க, பள்ளிக்கல்வித் துறையின் http://tnschools.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.2) மேலே குறிப்புட்டுள்ள இணைப்பு சென்று, சேவை பிரிவில் உள்ள RTE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

3) அடுத்து http://rte.tnschools.gov.in/tamil-nadu என்ற பக்கத்திற்கு செல்வோம்.

 

4) இங்கு ‘Start Application’ என்பதை கிளிக் செய்து உடன் விண்ணப்ப பக்கம் வரும். 
5) விண்ணப்பத்தில் மாணவரின் விவரங்கள், பெற்றோர் விவரங்கள், முகவரி, பிறப்பு சான்றிதழ், முகவரி சான்றிதழ், போன்றவற்றை அளித்தபிறகு உங்கள் முகவரிக்கு அருகில் உள்ள தனியார் பள்ளிகளைத் தேர்வு செய்ய முடியும்.

6) பள்ளியைத் தேர்வு செய்து விண்ணப்பித்தபிறகு சமர்ப்பி என்பதை அழுத்தவும்.

ஆர்டிஇ 25 சேர்க்கை 2020-21 டிஎன் பள்ளி பட்டியல் மாவட்ட வைஸ்

ஆர்டிஇ தமிழ்நாடு சேர்க்கை 2020 பள்ளி பட்டியல் இப்போது http://tnmatricschools.com/rte/rteschoollist.aspx இல் கிடைக்கிறது  இந்த வலைப்பக்கத்திலிருந்து மாவட்ட வைஸ் இடங்களின் எண்ணிக்கையை பெற்றோர்கள் சரிபார்க்கலாம். ஆர்டிஇ சேர்க்கை 2020 தமிழ்நாடு மொத்த இருக்கைகளை சரிபார்க்க , நீங்கள் மாவட்ட மற்றும் பள்ளியில் நுழைய வேண்டும்.





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தாலிக்கு தங்கம் திட்டம் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு தமிழக அரசின் திருமண...